மக்களாட்சி???தமிழ்நாட்டில் 6.79 கோடி மக்கள் (மன்னர்கள்?) ஆகிய நமக்கு பணி செய்ய அரசு ஊழியர்கள் 14 லட்சம் பேர். ஓய்வூதியம் பெறுபவர்கள் 7 லட்சம் பேர்.
அதாவது மொத்த மக்கள் தொகையில் 1.76 சதவீதம் பேர் மட்டுமே அரசு ஊழியர்கள்.
தமிழ்நாட்டின் மொத்த ஆண்டு வருவாய், ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 950 கோடி.
அரசு ஊழியர்களுக்காக செலவிடப்படும் ஊதியம் மற்றும் இதர செலவுகள், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 99 கோடி.
அதாவது
தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் சுமார் 71 சதவீதம் இவர்களே கபளீகரம் செய்து விடுகிறார்கள். மிச்சம் மீதியில், நலத் திட்டங்கள் என்ற பெயரில் அரசியல்வாதிகள் தின்றது போக சொச்ச எச்சமே மக்களாட்சியில் மன்னர்களாகிய நமது முன்னேற்றத்திற்காக செலவிடப்படுகிறது.
அதிகாரம் செய்ய வேண்டிய நாம் அடிமைகளாகவும், நம்மிடம் கூலி பெறும் வேலைக்காரர்கள் நம்மை அதிகாரம் செய்து ஆண்டு கொண்டிருப்பதும் இன்றைய கேலிக்கூத்து.https://www.thehindu.com/news/national/tamil-nadu/salaries-pensions-account-for-71-of-state-expenditure/article26101849.ece