💐 கவிதை தடாகம் 💐


Гео и язык канала: не указан, не указан
Категория: не указана


பலதரப்பட்ட சமூக
வலைத்தளக்கவிதைகள்
சங்கமிக்குமிடம்
💐 கவிதை தடாகம் 💐
( கவிதைகளின் சங்கமம் )
[ Twitter | FaceBook | Whatsapp | Instagram | Telegram | Other All Social Media Poems Here ]

Связанные каналы

Гео и язык канала
не указан, не указан
Категория
не указана
Статистика
Фильтр публикаций


*அழகாய்......🌹*

அமைவதெல்லாம்

வாழ்க்கை அல்ல .....

அமைவதை

*அழகாய்.......🌹*

மாற்றிக்கொள்வது

தான் வாழ்க்கை........


பெண்ணின்
அழகும்,
ஆணின்
ஆரோக்கியமும்,
ஒரு நாள் போய்விடும்...!

அவர்களின்
-கருணையும்,
-கருத்தொற்றுமையும்,
நீடித்திருக்கும்...!!
♥️
-முஸ்தபா காஸிமி -


பேசாமல் இருப்பவர்கள்
பார்த்து
எல்லோரும் கேட்கிறார்கள்
பேசினால் குறைந்து விடுமா? என..

ஆனால்,
அமைதியாய் இருப்பவர்கள்,
அதிகம் பேசுபவர்
பார்த்து
ஒரு நாளும் கேட்பதில்லை
"நீ ஏன் எப்போதும்
பேசுகிறாய்?" என்று..

ஏனெனில்,
அவர்கள் மௌனத்தின்
பலன் அறிந்தவர்கள்..
அதிகம் கேட்பவர்கள்..
கேட்பதை காப்பவர்கள்..
ரகசியங்கள் தெரிந்தவர்கள்..

நீங்கள் நினைப்பது
போலல்ல-
அமைதியை விரும்புபவர்களை
அப்படியே
விட்டு விடுங்கள்..
உங்களை விட அவர்களுக்குத்
தெரியும்,
யாருடன், எப்படி,
எப்போது பேச
வேண்டும் என்பது!

#Zakiya Nifal


மற்றவர்களிடமிருந்து வரும் இனிய சொற்கள் வெறும் சொற்களே....

நேசத்திற்கு உரியவர்களிடமிருந்து வருவதோ நிவாரணத் துளிகள்.... 😍

Musthafa Qasimi


பிடித்த ஒருவரின் அழைப்பிற்காக காத்திருக்கும் வலி,
உண்மையாய் நேசித்த சில உள்ளங்களுக்கு மட்டுமே புரியும்💔😭


ஒரு ஆணைப் பொறுத்தவரை மற்றவர்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காகவும் தனது சுய மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எந்தக் கவலையையும் யாரிடமும் வெளிக் காட்டவே மாட்டான்.ஆனால் அவன் அப்படி தனது கவலைகளை யாரிடமாவது கூறுகின்றான் என்றால் அது அவர்களிடம் வைத்த நம்பிக்கையும் அன்பின் உச்ச கட்டமும் என்று தான் கூற வேண்டும்.
_ Zah#


கடந்து வந்த பிறகு
தான் புரிகிறது வந்த பாதையை இன்னும் அழகாய் கடந்திருக்கலாமோ என்று....
மீண்டும் நடக்க
நினைக்கையில் பாதை
முடிவடைந்து விடுகின்றது...
நடக்கும் போதே
அழகாய் கடந்திடுவோம்
நமக்கான பாதைகளில்!!!

இனிய காலை வணக்கம்💐❤️


காலங்கள் கடந்தும்
காலாவதி ஆகிவிடாத மருந்து...

அன்பானவர்களின் அழகிய நினைவுகள் மட்டுமே..!!


கோபத்திலிருந்த மனைவி கேட்டாள்;

எங்க அம்மாவுக்கும் உங்க அம்மாவுக்கும் என்ன *வித்தியாசம்* தெரியுமா?
.
.
சிரித்தவண்ணம் கணவன் நயமாகக் கூறினான்:

எங்க அம்மா *வாழ்வதற்காக* என்னைப் பெற்றெடுத்தார்!

உங்க அம்மா *என் வாழ்க்கையையே* பெற்றெடுத்தார்!

*காதல்❤️*

*- முஸ்தபா காஸிமி*


எனது அவமானங்களையும்
வருத்தங்களையும் சேர்த்து
வைத்துள்ளேன் பழிவாங்க
அல்ல மறந்தும் வேறு யாருக்கும்
அதை செய்து விடக்கூடாது என்றே!

*தனித்து* *போராடி*
*கரைசேர்ந்த பின்*
*திமிராய் இருப்பதில்*
*தவறில்லையே!* 😉


ஓர் ஒற்றைப் பூ
உதிர்கிறது..
அவ்விடம்
வேறோர் மலர்
கொண்டு நிரப்பப்படுகிறது..

தோழி!!
நீயும் தான்
பிரதியிடப்படக்கூடியவள்
ஓர் அட்சரக்கணிதம்
போல..

இங்கு எதுவும்
ஆக
நீ அவசியப்படுவதில்லை..
உன் உயிர்ப்பறவை
சிறகடிக்கும் போது
அதன்
தடயங்களையும்
அழித்துப்போய் விடும்..

காற்றில் கலந்த கனவே..!!
இந்த வாழ்க்கை
அப்படித் தான்..
அவ்வளவு தான்..

# Zakiya Nifal


ஒதுங்கி விடுபவர்களை
அப்படியே விட்டு விடுங்கள்..
ஒரு வேளை தனிமை அவர்களுக்கு நிம்மதியை வழங்கக் கூடும்..

"பெருமை,கர்வம்
கோபம், திமிர்
அவர்களுக்கு" என்று
நீங்கள் எண்ணலாம்..
ஆனால் அவ்வாறன்று..!!
ஆழப்பதிந்த வடுக்களும்
ஆற மறுக்கும் வலிகளும்
அவர்களைக் கலங்கச்
செய்து கொண்டிருக்கிறது ..

ஒரு சிரிப்புக்குப் பின்னால்
மறைந்திருக்கும் அழுகையையும்
ஒரு மௌனத்தின் பின்னால்
மறைந்திருக்கும் வார்த்தையையும்
ஒரு கண்ணீரின் பின்னால்
மறைந்திருக்கும் தாக்கத்தையும்
நீங்கள் அறிய மாட்டீர்கள்..

இலகுவில் அழுது விடுபவர்களைக்
கேவலமாய்
எண்ணாதீர்கள்..
அவர்களுக்கு கிடைத்த
உள்ளம் உங்களைப் போன்றதல்ல..
அதற்கு அவர்கள்
என்ன செய்ய முடியும்?

உங்களால் அவர்களுக்காய்
செய்ய முடிவதெல்லாம்
பிரார்த்தனைகளில் அவர்களையும்
சேர்த்துக் கொள்ளுதல் தான்..

ஒதுங்கி விடுபவர்களை
அப்படியே விட்டு விடுங்கள்..!!

#By: Zakiya Nifal


ஏமாற்றுவதை விட
ஏமாற்றத்தைத் தழுவிக் கொள்வது
எவ்வளவு மேலானது.

காரணம்...
ஏமாறுவதில் வலியிருக்கும். ஆனால், நாம் யாரையும் ஏமாற்றி விட வில்லையென்ற திருப்தி இருக்கும்.😊❤️


எதிரிகளின் அவமானங்களை காட்டிலும்
நெருங்கியவர்களின் அன்புக்காகவே

சுயமரியாதையை அதிகம் இழக்கின்றோம்...
😢😢


நேசி..

தவறொன்றுமில்லை.
ஆனால்
உயிரை கொடுத்து நேசித்து விடாதே!

அவர்கள் பேசாத ஒவ்வொரு நொடியும்
உயிரே போய்விடும்..❣️❣️❣️❣️


சில
மனிதர்களை
கடந்து
போகையில்
பல
மெளனங்களையும்
கடந்து போக
வேண்டியிருக்கிறது.

நம் வாழ்வில்...😔😔


ஒருவரின் அன்பு
உங்களை
பெருமைப்படுத்தினால்,
அதன் கரம் பற்றி
முன்னேறுங்கள்......❤️

சிறுமைப்படுத்தினால்
அதனை கை கழுவி
விட்டு முன்னேறுங்கள்..... 💔


குற்றம்
காணத்
தொடங்கினால்
அன்பு❤️
செய்ய நேரம் இருக்காது.....


கவலைகள் தீரும் வரைக்கும் இப்போதே அழுது விடு...!🤍

அழுத நாட்களை எண்ணி சிரிக்க இருக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை...!🤍


உன்னுடைய சந்தோசத்தைப் பரி கொடுத்த அதே இடத்தில் மீண்டும் அதனைத் தேடிச் சென்று விடாதே.

காரணம்...
நீ அங்கு இழந்ததைப் பெற்றுக் கொள்ள மாட்டாய்.மாற்றமாக நீ மீண்டுமொரு அவமானத்தையே எதிர் கொள்ள நேரிடும்.

Показано 20 последних публикаций.

2 100

подписчиков
Статистика канала