🌹💫 *கழிவுநீர்த் தொட்டியில் நச்சு வாயுக்கள் எப்படி உருவாகின்றன... உயிரிழப்பு ஏன் ஏற்படுகிறது???*💫🌹
🌹💫 *வீட்டிலுள்ள ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின்சாதனப் பொருள்களிலிருந்து வெளியேறும் வாயுக்களாலும் உயிரிழப்பு ஏற்படுகிறதே??????*
🌹💫
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
சமீபகாலமாக கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வெளியேறும் விஷவாயு தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விநாயக நகர்ப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன்கள் உட்பட ஆறு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
அங்குள்ள வீட்டின் தரைதளத்தில் உள்ள கழிவுநீர்த் தொட்டியில், கழிவுநீர் முழுவதுமாக அகற்றப்பட்டுவிட்டதா என்பதைப் பார்க்க சுரதாபாய் என்பவர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அப்போது அவர் விஷவாயுவை சுவாசித்த காரணத்தால் உயிரிழந்துள்ளார். வெகுநேரமாகியும் அவர் வராததால் அங்கு சென்ற கிருஷ்ணமூர்த்தியும், அவரைத் தேடி வந்த மகன்கள் கண்ணன், கார்த்தி ஆகியோரும் அடுத்தடுத்து கழிவுநீர்த்தொட்டிக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி பலியாகினர். இவர்களை காப்பாற்றச் சென்ற அந்த வீட்டில் குடியிருந்த பரமசிவம் மற்றும் அவ்வழியாக வந்த காஸ் ஏஜென்சி ஊழியர் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோரும் உயிரிழந்தனர்.
`` 'செப்டிக்' என்பதற்கு `நச்சூட்டுப்பொருள்' என்றோர் அர்த்தம் உண்டு. டேங்க் என்றால் தொட்டி. அதைக் கழிவுநீர்த் தொட்டி என்று கூறுவதை விட `நச்சுத்தொட்டி' என்றே கூறலாம். நம்முடைய கழுத்தை தொடர்ந்து இரு நிமிடங்கள் நெரித்தாலே போதும். சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் இல்லாமல் உயிர்போக வாய்ப்புண்டு. அதேபோல, கழிவுநீர்த் தொட்டியிலுள்ள நச்சு வாயுக்களைச் சுவாசித்த இரு நிமிடங்களிலேயே உயிரிழக்க நேரிடலாம்’’ என்கிறார் நுரையீரல் நிபுணர் ஜெயராமன்.
வழக்கமாக கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது உயிரிழப்பு எப்படி ஏற்படுகிறது... இதைத் தவிர்க்க என்ன வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவரே விளக்குகிறார்.
``பெரும்பாலான வீடுகளிலுள்ள கழிவுநீர்த் தொட்டிகள் ஐந்து ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சுத்தம் செய்யப்படுகின்றன. நிலத்துக்குக் கீழே அமைக்கப்படும் கழிவுநீர்த் தொட்டியில் கழிவுகள் சேரும்போது அதில் பாக்டீரியா மற்றும் `கேஸ் ஃபார்மிங் பாக்டீரியா' (Gas forming bacteria) உருவாகும். இந்த வகை பாக்டீரியாக்களிலிருந்து விஷத்தன்மை கொண்ட வாயுக்கள் வெளியேறும். அவை கழிவுநீர்த் தொட்டியின் பல இடங்களில் நிரம்பியிருக்கும்.
இந்த நிலையில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய உள்ளே நாம் இறங்கும்போதோ அல்லது கழிவுநீரை வெளியேற்றிவிட்டு உள்ளே இறங்கிப் பார்க்கும்போதோ இந்த நச்சு வாயுக்கள் மூச்சடைப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கார்பன் மோனாக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு, சல்பர் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் மிக விரைவாக சுவாசப் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இந்த வாயுக்கள் நுரையீரலிலுள்ள ரத்தநாளங்கள் வழியாக வேகமாக மூளைக்குச் சென்று பாதிப்பு ஏற்படுத்துவதால் சுயநினைவை இழக்க நேரிடும். அடுத்ததாக, இதயம் மற்றும் ரத்த ஓட்டம், நரம்பு மண்டலம் போன்றவற்றில் பாதிப்பை உருவாக்கிவிடும். இதனால், `கார்டியோரெஸ்பிராடரி அரெஸ்ட்’ (cardio respiratory arrest) ஏற்பட்டு, உயிரிழக்கும் அபாயம் உருவாகும். இப்படித்தான் ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தில் ஒருவரையொருவர் காப்பாற்றச் சென்று, அடுத்தடுத்து ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
பொதுவாக கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்கென்று சில வழிமுறைகள் உள்ளன. அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ள கழிவுநீரை அகற்றும் பணியாளர்கள் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்வார்கள். முதலில் கழிவுநீர்த் தொட்டியிலுள்ள வாயுக்கள் மற்றும் கழிவுநீர் முழுவதையும் அகற்றுவார்கள். பின்னர், அதிலுள்ள திடப் பொருள்களை அதற்குரிய இயந்திரங்களைக் கொண்டு வெளியே எடுப்பார்கள். அதன்பிறகே, பாதுகாப்பான முகக் கவசம் அணிந்து கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்குவார்கள். இப்படி முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதுமின்றி, கழிவுநீர் அகற்றுவதற்கான வழிமுறைகளை அறியாமல், கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கும்போதுதான் இத்தகைய விபத்துகள் நடக்கின்றன.
கழிவுநீர்த் தொட்டியில் ஏராளமான விஷ வாயுக்கள் நிரம்பியிருப்பதால் அதை லேசாகச் சுவாசித்தாலே, மூச்சடைப்பு ஏற்பட்டு நினைவிழப்பார்கள். அப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் அருகில் இருந்து, ஆக்சிஜன் செலுத்தி ஊசி மூலமாக ஆன்டிபயாடிக் மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை ஏற்றி துரிதமான சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடியும்.
கழிவுநீரை அகற்றும்போது முக்கியமாக சில பாதுகாப்பு வழிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டும்.
*கழிவுநீர்த் தொட்டியில் உள்ள கழிவின் மேற்பகுதியில் விஷ வாயுக்கள் படிந்திருக்கும். இந்த வாயு