TGStat
TGStat
Введите текст для поиска
Расширенный поиск каналов
Russian
Язык сайта
Russian
English
Uzbek
Вход на сайт
Каталог
Каталог каналов и чатов
Поиск каналов
Добавить канал/чат
Рейтинги
Рейтинг каналов
Рейтинг чатов
Рейтинг публикаций
Рейтинги брендов и персон
Аналитика
Поиск по публикациям
Мониторинг Telegram
Как привлекать от 1000 пдп ежедневно?
Запустить рекламу в MiniApp с оплатой за пдп по 15 руб
Узнать подробности
реклама
Льешь с ФБ на телеграм?
Получай подписчиков до 3х раз дешевле.
Оптимизировать
реклама
Мир Кулинарии
У нас есть рецепты, лайфхаки для кухни. Рады всем!
Подпишись
реклама
Статистика
Избранное
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
@tvp_time_pass_only
Гео и язык канала:
не указан, не указан
Категория:
не указана
👉
@tvp_links
👈
*பொன் மொழிகள்*
*தன்னம்பிக்கை பதிவுகள்*
*கதைகள்*
*கட்டுரைகள்.*
*கவிதைகள்.*
*வரலாற்றுப் பதிவுகள்.*
*ஆன்மீகம்,*
*சமையல்*
*பயனுள்ள குறிப்புகள்*
https://telegra.ph/Tamil-movies-03-26
𝐶𝑙𝑖𝑐𝑘 ℎ𝑒𝑟𝑒 𝑡𝑜 𝑘𝑛𝑜𝑤 𝑎𝑏𝑜𝑢𝑡 𝑢𝑠☝
Связанные каналы
Гео и язык канала
не указан, не указан
Категория
не указана
Статистика
Избранное
Это ваш канал?
Подтвердить
Канал в реестре блогеров РКН?
Подтвердить
История канала
Фильтр публикаций
Выбрать месяц
Апрель 2020
Скрывать удаленные
Скрывать репосты
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 18:27
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
💫🌹 *“இனி மளிகை பொருட்களையும் ஆர்டர் செய்துகொள்ளலாம்!” – ஸ்விக்கியின் அசத்தலான புதிய திட்டம்!*🌹💫
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
ஸ்விக்கியின் இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலம் மளிகை கடைகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தமுடியும் என்று கூறப்படுகிறது.
இனி ஸ்விக்கியில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்வதற்கான புதிய திட்டத்தை ஸ்விக்கி நிறுவனம் தொடங்கியுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அங்கும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பல மக்கள் வெளியில் சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்க விருப்பம் காட்டுவதில்லை. இதனால், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் மளிகை பொருடகளையும் ஆர்டர் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை, இந்தியாவில் 125 நகரங்களில் ஸ்விக்கியின் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஸ்விக்கி ஆப்-ல் மளிகை பொருட்களை ஆர்டர் செய்வதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளதால், அதில் சென்று தேவையானவற்றை ஆர்டர் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்று ஸ்விக்கியில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்வதன் மூலம் மளிகை கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் 2 மணி நேரத்திற்கு உள்ளாகவே வீட்டிற்கு மளிகை பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 18:27
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
7
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 18:27
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
க்களை அகற்றுவதற்கென்றே மாநகராட்சி அலுவலகங்களில் இயந்திரங்கள் உள்ளன. எனவே, அவற்றைப் பயன்படுத்தி முதலில் வாயுக்களை வெளியேற்ற வேண்டும்.
* அடுத்ததாக ஒரு குழாயைத் தொட்டிக்குள் செலுத்தி, கழிவுநீரை முழுவதுமாக அகற்ற வேண்டும். பின்னர் அதிலிருக்கும் திடக் கழிவுகளை அள்ளி திறந்தவெளியில் கொட்டிவிட வேண்டும். இதற்காக உள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
* கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியாளர்களில் சிலர் மது அருந்திவிட்டு அந்தப் பணியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* தொட்டிக்குள் நேரடியாக இறங்கி சுத்தம் செய்ய வேண்டியிருந்தால் பாதுகாப்பான முகக் கவசம் அணிந்துகொள்ளவேண்டும்.
* கழிவுநீர்த் தொட்டிக்கு அருகிலேயே முதலுதவிப் பெட்டியைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம்.
* மருத்துவமனை அருகில் இருந்தால் பிரச்னையில்லை. இல்லையென்றால் ஒரு மருத்துவர் அல்லது செவிலியரை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்'' என்றார்.
``வீட்டிலுள்ள ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின்சாதனப் பொருள்களிலிருந்து வெளியேறும் வாயுக்களாலும் உயிரிழப்பு ஏற்படுகிறதே?
``வீட்டிலுள்ள ஏ.சி., பிரிட்ஜ் போன்றவற்றிலிருந்து நச்சு வாயுக்கள் வெளியேறாது. அதற்கு வேறு சில காரணங்கள் உள்ளன. சில நேரங்களில் `ஷார்ட் சர்க்யூட்' (short circuit) ஏற்படும்போது, அதிக வெப்பத்தினால் ஏ.சி.யிலுள்ள `காயில்' எரிந்துவிடும் அல்லது வெடித்துவிடும். ஏ.சி யில் உள்ள குழாயில் `கூலன்ட்' (coolant) சரியில்லை என்றாலும், ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருந்தாலும் இவ்வாறு ஏற்படும். அந்த நேரத்தில் அதிகப்படியான புகை வெளியேறும். இந்த மாதிரி நிகழ்ந்தால், உடனடியாக வீட்டிலுள்ள அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்துவிட்டு, அங்கிருந்து வெளியேறிவிடவேண்டும். பெரும்பாலும் இரவில் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும்போதுதான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
ஏனென்றால், ஏ.சி வெடிப்பதால் அருகிலுள்ள பொருள்கள் தீப்பிடிக்கும். அதிலிருந்து வெளியேறும் புகை மூச்சடைப்பை ஏற்படுத்தும். இதனால், அங்கிருப்பவர்கள் மயக்கமடைந்துவிடுகின்றனர். எனவே, அவர்கள் அறையிலிருந்து வெளியேற வழியின்றி, மூச்சடைத்து இறக்க நேரிடுகிறது. ஏ.சி போன்ற சாதனங்கள் வெடிப்பதால் வெளியேறும் புகை மனிதர்களை மெதுவாகக் கொல்லும். ஆனால், கழிவுநீர்த் தொட்டியிலுள்ள வாயுவானது உடனடியாகக் கொல்லும். இதுதான் இவை இரண்டுக்குமான வேறுபாடு. பொதுவாகப் புகை என்றாலே பகைதான். இதுதவிர ஏ.சி., பிரிட்ஜ் போன்ற சாதனங்களில் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். அதேபோல, அந்தப் பொருள்களை முறையாகப் பராமரிப்பதும் அவசியம். இவ்வாறு செய்தால் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்” என்கிறார் ஜெயராமன்.
நன்றி விகடன்
5
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 18:27
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
🌹💫 *கழிவுநீர்த் தொட்டியில் நச்சு வாயுக்கள் எப்படி உருவாகின்றன... உயிரிழப்பு ஏன் ஏற்படுகிறது???*💫🌹
🌹💫 *வீட்டிலுள்ள ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின்சாதனப் பொருள்களிலிருந்து வெளியேறும் வாயுக்களாலும் உயிரிழப்பு ஏற்படுகிறதே??????*
🌹💫
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
சமீபகாலமாக கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வெளியேறும் விஷவாயு தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விநாயக நகர்ப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன்கள் உட்பட ஆறு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
அங்குள்ள வீட்டின் தரைதளத்தில் உள்ள கழிவுநீர்த் தொட்டியில், கழிவுநீர் முழுவதுமாக அகற்றப்பட்டுவிட்டதா என்பதைப் பார்க்க சுரதாபாய் என்பவர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அப்போது அவர் விஷவாயுவை சுவாசித்த காரணத்தால் உயிரிழந்துள்ளார். வெகுநேரமாகியும் அவர் வராததால் அங்கு சென்ற கிருஷ்ணமூர்த்தியும், அவரைத் தேடி வந்த மகன்கள் கண்ணன், கார்த்தி ஆகியோரும் அடுத்தடுத்து கழிவுநீர்த்தொட்டிக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி பலியாகினர். இவர்களை காப்பாற்றச் சென்ற அந்த வீட்டில் குடியிருந்த பரமசிவம் மற்றும் அவ்வழியாக வந்த காஸ் ஏஜென்சி ஊழியர் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோரும் உயிரிழந்தனர்.
`` 'செப்டிக்' என்பதற்கு `நச்சூட்டுப்பொருள்' என்றோர் அர்த்தம் உண்டு. டேங்க் என்றால் தொட்டி. அதைக் கழிவுநீர்த் தொட்டி என்று கூறுவதை விட `நச்சுத்தொட்டி' என்றே கூறலாம். நம்முடைய கழுத்தை தொடர்ந்து இரு நிமிடங்கள் நெரித்தாலே போதும். சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் இல்லாமல் உயிர்போக வாய்ப்புண்டு. அதேபோல, கழிவுநீர்த் தொட்டியிலுள்ள நச்சு வாயுக்களைச் சுவாசித்த இரு நிமிடங்களிலேயே உயிரிழக்க நேரிடலாம்’’ என்கிறார் நுரையீரல் நிபுணர் ஜெயராமன்.
வழக்கமாக கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது உயிரிழப்பு எப்படி ஏற்படுகிறது... இதைத் தவிர்க்க என்ன வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவரே விளக்குகிறார்.
``பெரும்பாலான வீடுகளிலுள்ள கழிவுநீர்த் தொட்டிகள் ஐந்து ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சுத்தம் செய்யப்படுகின்றன. நிலத்துக்குக் கீழே அமைக்கப்படும் கழிவுநீர்த் தொட்டியில் கழிவுகள் சேரும்போது அதில் பாக்டீரியா மற்றும் `கேஸ் ஃபார்மிங் பாக்டீரியா' (Gas forming bacteria) உருவாகும். இந்த வகை பாக்டீரியாக்களிலிருந்து விஷத்தன்மை கொண்ட வாயுக்கள் வெளியேறும். அவை கழிவுநீர்த் தொட்டியின் பல இடங்களில் நிரம்பியிருக்கும்.
இந்த நிலையில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய உள்ளே நாம் இறங்கும்போதோ அல்லது கழிவுநீரை வெளியேற்றிவிட்டு உள்ளே இறங்கிப் பார்க்கும்போதோ இந்த நச்சு வாயுக்கள் மூச்சடைப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கார்பன் மோனாக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு, சல்பர் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் மிக விரைவாக சுவாசப் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இந்த வாயுக்கள் நுரையீரலிலுள்ள ரத்தநாளங்கள் வழியாக வேகமாக மூளைக்குச் சென்று பாதிப்பு ஏற்படுத்துவதால் சுயநினைவை இழக்க நேரிடும். அடுத்ததாக, இதயம் மற்றும் ரத்த ஓட்டம், நரம்பு மண்டலம் போன்றவற்றில் பாதிப்பை உருவாக்கிவிடும். இதனால், `கார்டியோரெஸ்பிராடரி அரெஸ்ட்’ (cardio respiratory arrest) ஏற்பட்டு, உயிரிழக்கும் அபாயம் உருவாகும். இப்படித்தான் ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தில் ஒருவரையொருவர் காப்பாற்றச் சென்று, அடுத்தடுத்து ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
பொதுவாக கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்கென்று சில வழிமுறைகள் உள்ளன. அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ள கழிவுநீரை அகற்றும் பணியாளர்கள் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்வார்கள். முதலில் கழிவுநீர்த் தொட்டியிலுள்ள வாயுக்கள் மற்றும் கழிவுநீர் முழுவதையும் அகற்றுவார்கள். பின்னர், அதிலுள்ள திடப் பொருள்களை அதற்குரிய இயந்திரங்களைக் கொண்டு வெளியே எடுப்பார்கள். அதன்பிறகே, பாதுகாப்பான முகக் கவசம் அணிந்து கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்குவார்கள். இப்படி முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதுமின்றி, கழிவுநீர் அகற்றுவதற்கான வழிமுறைகளை அறியாமல், கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கும்போதுதான் இத்தகைய விபத்துகள் நடக்கின்றன.
கழிவுநீர்த் தொட்டியில் ஏராளமான விஷ வாயுக்கள் நிரம்பியிருப்பதால் அதை லேசாகச் சுவாசித்தாலே, மூச்சடைப்பு ஏற்பட்டு நினைவிழப்பார்கள். அப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் அருகில் இருந்து, ஆக்சிஜன் செலுத்தி ஊசி மூலமாக ஆன்டிபயாடிக் மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை ஏற்றி துரிதமான சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடியும்.
கழிவுநீரை அகற்றும்போது முக்கியமாக சில பாதுகாப்பு வழிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டும்.
*கழிவுநீர்த் தொட்டியில் உள்ள கழிவின் மேற்பகுதியில் விஷ வாயுக்கள் படிந்திருக்கும். இந்த வாயு
3
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 18:27
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
3
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 18:27
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
அடைகிறது; உடம்பெல்லாம் வியர்க்கிறது. ஆனால் கூர்ந்து கவனித்த மறு நிமிடம் அது உங்கள் கணவர் தான் என்று தெரிந்தவுடன் அரை வினாடியில் மகிழ்ச்சி மேலோங்கி உடல் பூரித்து பயம் போயே போய் விடுகிறது! நம்பிக்கை மாறியவுடன் உணர்ச்சிகள் மாறுகின்றன. ஆனால் இப்போது எதிர் கொள்ள வேண்டிய விஷயம் எப்படி இந்த அபூர்வமான வலிமை வாய்ந்த ‘நம்பிக்கை மாற்றத்தை’ ஏற்படுத்துவது என்பது தான்!” என்று விளக்கமாக இது பற்றி இப்படிக் கூறினார்!
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் தன்னார்வத் தொண்டர்களிடம் ஒரு விநோதமான சோதனை நடத்தப்பட்டது. லாரா டிப்பிட்ஸ் என்ற பெண்மணிக்கு வலது தோளிலும் கையிலும் தாங்கமுடியாத வலி. அவரை தானே நேரில் ப்ரெய்ன் வேவ்களை ஸ்கானரில் பார்க்க ஏற்பாடு செய்தனர். வலி தசைகளில் இல்லை அல்லது காயம் அடைந்த கையில் இல்லை. அது மூளையில் இருக்கிறது” என்றார் அந்தப் பெண்மணி! “ஒரு சிக்னல் காயப்பட்ட இடத்திலிருந்து கிளம்பி மூளைக்குச் செல்கிறது. அதை மூளை வலி என்று “எடுத்துக் கூறுகிறது”! என்கிறார் அவருடைய மருத்துவர்.
எந்த விதமான எண்ணம் வலியை உண்டாக்குகிறது, எது வலியை நீக்குகிறது என்பதையும் அவர் ஆராய ஆரம்பித்தார். மனச் சித்திரங்கள் ஓரளவு நல்ல பலனைத் தருகின்றன என்பது அவரது கண்டுபிடிப்பு.
“ஸ்கானரில் வலி ஏற்படும் மூளைப் பகுதிகளைப் பார்த்து நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியும் என்று நினைக்கும் போதே பாதி வலி போய் விடுகிறது. இது அதிசயமாக இருக்கிறது” என்றார் லாரா.
ஆக அறிவியல் சோதனைகளின் முடிவுகளால் மருத்துவர்களும் கூட மனோசக்தி உடலின் மீது வலுவான நல்ல ஆதிக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று கூற ஆரம்பித்துவிட்டனர். அதாவது MIND OVER BODY என்பது நிரூபணமாகி வருகிறது!
ஆறுதல் மருந்தான ப்ளேசிபோ அற்புத மருந்தாக அமைவது மனோசக்தியின் மூலமாகத் தான்!
நன்றி : பாக்யா 28-8-2015 பாக்யா இதழில் வெளி வந்த கட்டுரை
இப்போது புரிகிறதா எந்த வியாதியையும் குணப்படுத்த முடியாவிட்டாலும் ஆங்கில மருத்துவத்திற்கு ஏன் இவ்வளவு வாடிக்கையாளர்கள் என்று? எல்லாம் ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) இன் மகிமைதான்.
மனோசக்தியின் வலிமைக்கு உதாரணமாக ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றிக் கூறும் போதே அதற்கு எதிர்ப் பக்கமான நோசிபோ எபெக்ட் (Nocebo effect) பற்றியும் அறிய வேண்டியது அவசியமாகிறது.
3
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 18:27
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
3
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 18:27
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
🌹💫 *எந்த வியாதியையும் குணப்படுத்த முடியாவிட்டாலும் ஆங்கில மருத்துவத்திற்கு ஏன் இத்தனை வாடிக்கையாளர்கள்????!!*🌹💫
*###ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect)*
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!....
இத்தனை நாட்போல் இனியும் நின் இன்பமே
விரும்புவன், நின்னை மேம்படுத்திடவே
முயற்சிகள் புரிவேன்….”
- மகாகவி பாரதியார்
இடைவிடாமல் விஞ்ஞானிகளில் பலர் ஆர்வமுடன் ஆராய்ச்சி செய்யும் ஒரு துறை மனோசக்தியின் வலிமை பற்றியது! அவர்களே எதிர்பார்க்காத பிரமிப்பூட்டும் முடிவுகளை அவர்களின் ஆராய்ச்சிகள் தந்துள்ளன.
இந்த மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஒன்று ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) என்பது.
ப்ளேசிபோ என்றால் என்ன?
ஆறுதல் மருந்து என்று தமிழில் கூறலாம். ஒரு நோயாளிக்கு மருத்துவர் ஒருவர் வியாதி ஒன்றுக்கு உரிய அபூர்வ மாத்திரை அல்லது மருந்தைத் தருவதாகச் சொல்லி விட்டு அவருக்கு சாதாரண மாத்திரை ஒன்றைத் தருவார், ஆனால் அதன் நல்ல விளைவுகளோ நோயாளியிடம் அபாரமாக இருக்கும். இது தான் ப்ளேசிபோ எபெக்ட்!
பெயரளவில் மாத்திரையாக இருக்கும் ஒன்று உடல் ரீதியாக நோயாளி ஒருவரிடம் அபூர்வ விளைவை ஏற்படுத்த முடியுமா? தர்க்க ரீதியாக நிச்சயம் முடியாது என்று சொல்லி விட்டாலும் சோதனை செய்து பார்த்ததில் பல நோயாளிகள் நன்கு குணமடைந்து மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
இதன் காரணம் மிக்க எளிமையான ஒன்று! நோயாளி அந்த மாத்திரை தன் உடலில் அற்புதமாக வேலை செய்கிறது என்று நினைப்ப தனாலேயே அவர் குணமாகிறார்!
இதை நிரூபிக்கும் விதத்தில் நூற்றுக் கணக்கான சோதனைகள் உலகளாவிய விதத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.
இந்த ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றி வேடிக்கையான சோதனை ஒன்றை பிரின்ஸ்டன் பல்கலைக் கழக மாணவர்களில் சிலர் செய்து பார்த்தனர்.
தங்கள் வகுப்புத் தோழர்களை அழைத்து ‘விசேஷமான பார்ட்டி’ ஒன்றை அவர்கள் தந்தனர். பார்ட்டி என்றாலே மதுபானம் உண்டல்லவா? அனைவரும் மனம் மகிழ்ந்து அதில் கலந்து கொண்டனர்.வழக்கமான பீரில் 5% ஆல்கஹால் இருக்கும். இவர்கள் கொடுத்த பானத்திலோ வெறும் 0.4% ஆல்கஹால் தான் “பெயருக்கு” இருந்தது. இந்தக் குறைந்த அளவு பானத்தை மதுபான வகையிலேயே சேர்க்க முடியாது.
ஆனால் நடந்தது என்ன?
இதைக் குடித்த தோழர்கள் வழக்கமான பானத்தை அருந்தியிருப்பதாக நினைத்தனர். ஆட்டமும் பாட்டமுமாக வழக்கமான பீர் பார்ட்டியின் ஆர்ப்பாட்டத்திற்கும் அதிகமாக அவர்களின் நடத்தை அமைந்தது. இந்த முடிவால் பதறிப் போன உலகின் பெரும் மருந்துக் கம்பெனிகள் நரம்பு மண்டலத்தில் ப்ளேசிபோ எந்த வித விளைவை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி ஆராய ஆரம்பித்து விட்டன!
வெறும் சர்க்கரைக் கட்டிகள் பெரிய வேலையைச் செய்தால் அவர்கள் கம்பெனிகள் திவாலாகி விடுமே!
உலகின் எண்ணெய் கம்பெனிகளை விட அதிகமாக விற்பனை செய்து லாபம் ஈட்டும் மருந்துக் கம்பெனிகள் பதறுவதில் வியப்பே இல்லை!
சக் பார்க் என்பவர் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர். மனவிரக்தியால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த அவரால் வேலை செய்யவே முடியவில்லை. அவரிடம் மருத்துவர், “இதோ இது ஒரு சர்க்கரைக் கட்டி தான். சாப்பிடுங்கள் பலன் அளிக்கும்” என்று வேடிக்கையாகக் கூறியவாறே ஒரு ப்ளேசிபோ மாத்திரையைத் தந்தார்.
ஆனால் அதைச் சாப்பிட்ட சக் பார்க்கோ, ‘மருத்துவர் விளையாட்டாக ஏதோ கூறுகிறார், தான் சாப்பிட்ட மாத்திரை சிறந்த ஒன்று’, என்று நினைத்தார்.
விளைவு, அவர் மனச் சோர்வு போயே போனது! “நீங்கள் உண்மையிலேயே சர்க்கரைக் கட்டியைத் தான் சாப்பிட்டீர்கள்” என்று அவரிடம் கூறிய போது அவர் வியந்தே போனார்!
பாஸிடிவ் திங்கிங் வேலை செய்யும் என்பதை புன்முறுவல் பூத்து மருத்துவர்கள் எள்ளி நகையாடுவது வழக்கம். ஆனால் பல சோதனைகள் நோயாளிகளைக் குணமாக்கியதைக் கண்டவுடன் அவர்கள் PET ஸ்கானர்கள், எம் ஆர் ஐ ஆகியவற்றின் மூலமாக இந்த சிகிச்சை முறையை ஆராய ஆரம்பித்தனர். சமீபத்திய ஆய்வு முடிவுகள் ப்ளேசிபோ மாத்திரையைச் சாப்பிட்ட ஒருவரின் மூளை அதிகமான டோபமைனைச் (Dopamine) சுரக்கிறது என்று கண்டுபிடித்துள்ளன. நோயாளிகள் ப்ளேசிபோ மாத்திரையை எடுத்துக் கொண்ட போது சரியான மாத்திரையைத் தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டவுடன் இந்த அபூர்வ விளைவு ஏற்படுகிறது!
இதனால் சரியான மாத்திரை உண்மையில் என்ன விளைவை எப்போது ஏற்படுத்தும் என்பதை ஆராய்வதும் விஞ்ஞானிகளின் கடமையாக ஆகி விட்டது.
மனோசக்தி உடலின் மீது பெரிய ஒரு வலுவான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்பதையே ப்ளேசிபோ சோதனை நிரூபிக்கிறது.
கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் டார் வேகர் (Tor Wager), “ப்ளேசிபோ மூளையில் பல செய்முறைகளைத் தூண்டி உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை விளக்க ஒரு உதாரணத்தைக் கூறலாம். இரவு நேரத்தில் வாசலில் திடீரென ஒரு நிழலுருவம் தோன்றுகிறது. உடனே உங்கள் விழிகள் விரிகின்றன.
உடல் எச்சரிக்கை நிலையை
more channels
5
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 18:27
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
more channels
5
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 17:19
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
💫🌹 *குழந்தையின் சேட்டையால் 49 ஆண்டுகள் திறக்க முடியாமல் போன ஐபேடு!!*💫🌹
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
குழந்தைகளுக்கு செல்போன்தான் முக்கிய விளையாட்டுப் பொருளாக இருக்கிறது. தவழத் தொடங்கியது முதலே செல்போன் வெளிச்சம் குழந்தைகளை ஈர்த்துவிடுகிறது. மழலை வார்த்தைகளை கேட்டு ரசிப்பதற்காக குழந்தைகளிடம் செல்போன்களை பேசக் கொடுப்பது வாடிக்கை யாகிவிட்டது. இப்படியாக வளரத் தொடங்கும் குழந்தைகள், செல்போன் ரைம்ஸ்கள், விளையாட்டுகள், கார்ட்டூன் தொடர் களிலும் மூழ்கிப்போகின்றன.
ஆனால் குழந்தைகளுக்கு செல்போன்களின் பல்வேறு சேவைகளை பயன்படுத்தத் தெரியாது என்பதே உண்மை. அமெரிக்காவில் அப்பாவின் ஐபேடை, பாஸ்வேர்டு போட்டு திறக்கத் தெரியாத 3 வயது குழந்தையால் அந்த ஐபேடு திறக்க முடியாத அளவுக்கு மூடிக் கொண்டது. அந்தக் குழந்தை மீண்டும் மீண்டும் தவறான பொத்தான்களை அழுத்தி விளையாடியதால் அது மிகச்சிக்கலாக மாறிவிட்டது. ஆமாம், அதை 49 ஆண்டுகளுக்கு இனிமேல் திறக்கவே முடியாதவகையில்மூடிக் கொண்டுவிட்டது.
2 கோடியே 55 லட்சத்து 36 ஆயிரத்து 442 நிமிடங்கள் கழித்து திரும்ப திறக்க முயற்சி செய்யுங்கள் என்ற தகவல் மட்டுமே திரையில் காட்டப்படுகிறது. இது சுமார் 49 ஆண்டு களுக்கு சமமான நேரமாகும். இதனால் சரியான பாஸ்வேர்டு தெரிந்தும் அவரது தந்தையால் ஐபேடை திறக்க முடியவில்லை. ஐபேடு காட்டும் தகவலை புகைப்படமாக எடுத்த அவர் ஆப்பிள் நிறுவனத்தினரை தொடர்பு கொண்டார். அவர்களும் அதை திறக்க வழியில்லை என்று கைவிரித்து விட்டனர். மாற்று வழியில் திறக்க முயன்றால் அதில் சேமிக்கப் பட்டுள்ள தகவல்கள் அழிந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.
குழந்தைகளிடம் போனை விளை யாட கொடுப்பவர்களும், பேட்டன் லாக் மற்றும் நம்பர் லாக் போட்டிருக் கிறோம் என்ற நம்பிக்கையில் குழந்தை களிடம் போனை கொடுப்பவர்களும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே இந்த சம்பவம் விளக்குகிறது.
35
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 17:19
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
💫🌹 *#ஒரே வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை- புதிய சாதனம் உருவாக்கிய டாக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள்....*🌹💫
அமெரிக்காவில் கொத்துக் கொத்தாக கொரோனா வைரசுக்கு மக்கள் பலியானதற்கு வென்டிலேட்டர் பற்றாக்குறையும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதனை உணர்ந்த அமெரிக்க வாழ் பாகிஸ்தான் மருத்துவரான சவுத் அன்வர், ஒரு வென்டிலேட்டர் மூலம் ஒரே சமயத்தில் 7 நோயாளிகளுக்கு உதவக்கூடிய புதிய சாதனத்தை உருவாக்கினார்.
அவரது இந்த கண்டுபிடிப்பின் மூலம் அவர் அமெரிக்க மக்கள் மத்தியில் ஹீரோவாக உருவாகியிருக்கிறார். அவரது மருத்துவப் பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சவுத் விண்ட்சரில் உள்ள அவரது வீட்டின் அருகே அப்பகுதி மக்கள் வரிசையாக கார்களில் அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தி ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
கார்களுக்குள் இருந்தபடி வாழ்த்து பேனர்களை தாங்கியும், கைகளை அசைத்தும் சென்றனர். இதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த டாக்டர் அன்வர், பதிலுக்கு தானும் கைகளை அசைத்து நன்றி தெரிவித்தார். தன் மீது மரியாதையும் அன்பும் வைத்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்து டாக்டர் அன்வர் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார்.
மான்செஸ்டர் மெமோரியல் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் அன்வர், கனெக்டிகட் மாநில செனட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
22
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 17:19
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
19
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 17:19
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
23
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 17:19
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
🌹💫 *கொரோனா நோய்க்கு எதிரான போரில் உலக நாடுகளின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வண்ணம் ஸ்விஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலை மீது உலகின் 25 நாடுகளுடைய கொடிகளின் உருவங்களை ஒன்றன்பின் ஒன்றாக ஸ்விஸ் நாட்டு அரசு லேசர் ஒளி மூலம் விழ செய்தது*🌹💫
23
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 17:19
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
23
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 17:19
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
🌹💫 *இயற்கை நமக்கு கற்று கொடுத்த வாழ்வியல்*
*##ஒரு interesting report*
💫🌹
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
இந்த ஒரு மாதத்தில் ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு, கடந்த 10 நாட்களாக மயானத்திற்கு வரும் உடல்கள் 50% குறைந்துள்ளது. தற்கொலை கேஸ்கள் zero.விபத்து மரணம்
மிகவும் குறைத்து விட்டது.
Surprising.
இத்தனைக்கும் மருத்துவமனைகளில் OPD இல்லை. அவசர கேஸ்கள் மட்டும்தான் attend செய்கிறார்கள்
எங்கள் ஊரில் புகழ் பெற்ற மருத்துவமனைகளில் கூட்டம்
எப்பொழுதும் நிரம்பி வழியும்.
எங்கே போனார்கள் அவ்வளவு பேரும்?
வீட்டோடு இருப்பதால் No outsidefoods. பர்கர், பிட்சா,Cool drinks, Fried foods, Junk foods, மைதா உணவுகள்,packed drinks எல்லாம் காணாமல் போயிடுச்சு.
எல்லாம் உணவும் வீட்டு preparation.
அஜீரணம், Gas trouble, Cold,fever எதுவும் இல்லை. வீட்டில் எல்லோரிடமும் கலகலப்பாக இருப்பதால் BP Control.
இந்த Complaint க்காக தினமும் மருத்துவமனைக்கு ஊர்வலம் போனவர்கள் வீட்டில் happy.
தற்கொலை எண்ணம் வீட்டில் எல்லோருடனும் கலந்து இருப்பதால், No suicide attempt.
ஊரடங்கில் தேவை இல்லாமல் பைக்கில் சுற்றுவது குறைந்ததால் Accidental death
குறைந்துவிட்டது.
திருட்டு பயம் இல்லை. மதுக்கடைகள் இல்லை.
ஊரே பளிச்.
உடலுக்கு நல்ல ஓய்வும், பராம்பரிய வீட்டுஉணவும் உட்கொள்வதால் உடல் தன்னைதானே புதுப்பித்து கொள்கிறது.
lmmune system அதிகரிக்கிறது.
அது போக தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலக்காததால் சுத்தமான குடிநீர், வாகனப் போக்குவரத்து இல்லாததால் சுத்தமான காற்றும் Plus Points வகிக்கிறது உடல் நலத்திற்கு.
நாம் தொலைத்த சொர்க்கங்கள்தான்.
Corona வடிவில் இந்த வாழ்க்கை
புனர்ஜென்மம் போல.
இந்த வாழ்வு நிரந்தரமல்ல.
Normal lifeக்கு சீக்கிரம் மாறி விடுவோம்.
இந்த தனிமை வாழ்வில் இயற்கை நமக்கு
கற்று கொடுத்த வாழ்வியல் நலன் பாடங்களை
முடிந்த வரை இனி வரும் காலத்தில் நடைமுறைபடுத்துதல் சிறப்பு.
இயற்கை நம்மை சீர்படுத்துகிறது.வாழ்வை மேம்படுத்துகிறது.
இப்படித்தான் வாழ வேண்டும் என்று
தலையில் ஓங்கி குட்டி பாடம் நடத்துகிறது.
இந்த அடிப்படைவாழ்வியல் உண்மைகள் புரிதலோடு இனி அடுத்த பயணத்தை தொடர வேண்டும்.
மகிழ்ச்சியைத் தேடாதே;
உருவாக்கு... !
வாழ்வினிது
சிந்தித்துசெயலாற்றுங்கள்
more channels
25
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 17:19
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
03:51
Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
Natural food medicine 🍒🥦🥦🥦🥦
more channels
22
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 14:54
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
சூப்பர் ஸ்டார்களின் கதாநாயகி!
குமாரி ருக்மணி (ஏப்ரல் 19, 1929 - செப்டம்பர் 4, 2007) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையாவார்.
பிறப்புஏப்ரல் 19, 1929இறப்புசெப்டம்பர் 4, 2007(அகவை 78)
சென்னைதேசியம்இந்தியன்பணிநடிகைஅறியப்படுவதுஇந்திய திரைப்பட நடிகைபெற்றோர்நுங்கம்பாக்கம் ஜானகிவாழ்க்கைத்
துணைஒய். வி. ராவ்பிள்ளைகள்லட்சுமிஉறவினர்கள்ஐஸ்வர்யா(பேர்த்தி)
ருக்மணி தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் மெலட்டூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் நடிகை நுங்கம்பாக்கம் ஜானகியின் மகளும், நடிகை லட்சுமியின் தாயாரும், நடிகை ஐஸ்வர்யாவின் பாட்டியும் ஆவார். இவரது கணவர் பெயர் ஒய். வி. ராவ் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.
அன்று வந்ததும் அதே நிலா: குமாரி ருக்மணி
எழுபது ஆண்டுகளுக்கு முன் இளமை பூகம்பமாக வெள்ளித்திரையை வசீகரித்தவர் குமாரி ருக்மணி. ’சினிமா ராணி’ டி.பி. ராஜலட்சுமியின் கண்டுபிடிப்பு. தமிழ் டாக்கியின் முதல் கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரியைவிடக் கூடுதல் பிரகாசம் பரப்பும் எழில் தோற்றமும், மிகக் களையான முகமும், பேசும் கருவண்டுக் கண்களும் கொண்டவர் குமாரி ருக்மணி.
மும்பையில் ஹரிச்சந்திரா படப்பிடிப்பு. லோகிதாசன் வேடத்துக்குப் பொருத்தமான பாலகன் கிடைக்கவில்லை. பளிச்சென்று ஒரு சிறுமி டி.பி. ராஜலட்சுமியின் கண்களில் தெரிந்தாள். சினிமாக்காரர்கள் குடியேறிய லாட்ஜில், பக்கத்து அறையில் அரசு அதிகாரி ஒருவர் தன் குடும்பத்தோடு தங்கியிருந்தார். யார் எவர் என்ற விசாரணையில் ஏற்கெனவே தெரிந்தவர்தான் என்கிற விவரம் புரிந்தது. அதிகாரிக்கும் நடிகைக்கும் ஒரே ஊர், தஞ்சை - மெலட்டூர்.
‘குழந்தை அழகாக, சமர்த்தாக இருக்கிறாள். லோகிதாசனாக நடிக்க வைக்கலாமா?’
டைரக்டர் ப்ரபல்ல கோஷின் சற்றும் எதிர்பாராத கேள்வியால் மவுனம் சாதித்தார்கள் பெற்றோர். ருக்மணியின் அம்மா, நடிகை நுங்கம்பாக்கம் ஜானகிக்கு (சீதா வனவாசம், லலிதாங்கி, மாயாபஜார் படங்களில் நடித்தவர்) தன் ஆறு வயது மகள், எடுத்த எடுப்பில் காமிரா முன்பு லோகிதாசனாகப் பாம்பு கடித்து இறப்பதில் சென்டிமென்ட் சங்கடம். அப்பாவுக்கோ இயல்பான சந்தேகம்.
‘பாப்பாவுக்கு நடிப்பு வருமா ...?’ என்றார்.
‘அது எங்கள் பொறுப்பு!’
ருக்மணிக்கு நெற்றியில் அழகாகத் திலகமிட்டு ஆசி கூறி நடிக்க வைத்தார் டி.பி. ராஜலட்சுமி.
ஹரிச்சந்திரா தொடங்கி குழந்தை நட்சத்திரமாக ருக்மணி பிரபலமானார். டி.பி. ராஜலட்சுமியுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு. ‘ஜலஜா’ படம் மூலம் இந்தியிலும் தோன்றும் அதிர்ஷ்டம்! அம்மா ஜானகியும் ருக்மணியும் சேர்ந்து ‘பாக்யலீலா’ படத்தில் இடம் பெற்றார்கள்.
டி.ஆர். மகாலிங்கத்துடன் ’பூலோக ரம்பையில்’ நடித்தபோது ‘குமாரி ருக்மணி’ என்று டைட்டிலில் காட்டினார்கள். அதே இணையின் அடுத்த சூறாவளி ஏவிஎம்மின் ஸ்ரீ வள்ளி. திருச்சூரிலிருந்து வந்து சேர்ந்த நாலு வயது யானைக்குட்டி ருக்மணியுடன் நடித்தது. ஏ.வி.எம்-மின் பேபி ஆஸ்டின் காரிலிருந்து இறங்கியதும் ருக்மணி நேராக யானையிடம் செல்வார். வெல்லமும் தேங்காயும் போதும் போதுமென அதற்குத் தந்து தாஜா செய்வார்.
‘ஹாத்தி மேரா சாத்தி’ என்று உரக்கக் கூவலாம் போலிருந்தது ருக்மணிக்கு. குட்டியிடம் அத்தனை அன்யோன்யம்! யானை தன் துதிக்கையால் வள்ளியை இடுப்பைப் பிடித்து, அலேக்காகத் தலைக்கு மேல் தூக்கி, முருகனின் மடியில் போடும் மன்மதலீலை காட்சி. ருக்மணியுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் சூப்பராக நடித்தது குட்டி யானை.
சொந்தமாகப் பாடி நடிப்பது அக்காலத்திய மரபு. டி.ஆர். மகாலிங்கத்தின் கந்தர்வ கானத்துக்கு இடையூறாக ஒலித்தது ருக்மணியின் குரல். ஏ.வி.எம் ஏற்கெனவே ருக்மணி பாடியதைத் தயங்காமல் நீக்கி, பி.ஏ. பெரிய நாயகியைப் பின்னணி பாடச் செய்தார். விளைவு ருக்மணியின் விலகலில் முடிந்தது. ஏ.வி.எம்-முடன் மூன்று சினிமாக்களுக்கு ஒப்பந்தமான ருக்மணி விட்டு விடுதலையானார். ஹரிதாஸ் படத்துக்கு இணையாக ஸ்ரீ வள்ளி, எல்லா ஊர்களிலும் ஓடி வசூலில் பிரளயத்தை ஏற்படுத்தியது. காரணம் ருக்மணிக்குப் பருவம் 18. மகாலிங்கத்துக்கு வயது 21.
தமிழ் டாக்கியின் முதல் இளஞ்ஜோடி!
“ஏ.வி.எம். ஸ்ரீ வள்ளி படத்தை செட் போட்டு எடுத்தார். மொத்த யூனிட்டும் அதிகாலை நாலரை மணிக்கு லொகேஷனுக்கு வந்தால், அன்றைய படப்பிடிப்பு முடியும் வரை அங்கேதான் இருப்போம்.
சொன்னா ஆச்சர்யப்படுவீங்க. ஏ.வி. எம். பிரம்மாண்டமா எடுத்த ‘வாழ்க்கை’ படத்துல நான் ஹீரோயினா நடிச்சிருக்கணும். எனக்குத்தான் கான்ட்ராக்ட் இருந்துச்சு. ஆனா அதுக்குள்ள என் பதினெட்டாவது வயசுல டைரக்டர் ஒய். வி. ராவுக்கு திருமதி ஆகிட்டேன். அதனால அதுல வைஜெயந்திமாலா நடிச்சாங்க” என்றார் குமாரி ருக்மணி.
ஒய்.வி. ராவ்- கே. பாக்யராஜ்களுக்கு முன்னோடி!
தியாகராஜ பாகவதருடன் இணைந்து நடித்து, ஒய். வி. ராவ் இயக்கிய ‘சிந்தாமணி’, தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனைச் சரித்திரம்! அதைத் தயாரித்த ராயல் டாக்கீஸார் தங்களுக்குக் கிடைத்த அமோக வசூலில், ‘சிந்தாமணி’ என்ற பெயரிலேயே மதுரையில் சினிமா தி
22
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 14:54
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
யேட்டர் ஒன்றைக் கட்டினார்கள்.
1946 கோடையில் வெளியானது ‘லவங்கி’.
பெயர்க் காரணம் பெரிதாக ஏதுமில்லை. நாயகன் ஒய்.வி.ராவ். தாம்பூலத்தோடு லவங்கத்தையும் சுவைப்பார். அழகான யுவதி கண் எதிரே வருவாள். ‘ஏ லவங்கி!’ என அழைப்பார். குமாரி ருக்மணி - லவங்கி.
ஒய்.வி. ராவுக்கும் ருக்மணிக்கும் லவங்கியின்போது நிகழ்ந்தது காதல் கல்யாணம். அவர்களது ஒரே வாரிசு வேங்கட லட்சுமி. பின்னர் சினிமா வழக்கமாக ஒய்.வி. ராவும் - ருக்மணியும் பிரிந்துவிட்டார்கள்.
ஸ்ரீ ராம் ஜோடியாகக் குமாரி ருக்மணி ஹீரோயினாக நடித்த கடைசி படம் ‘முல்லை வனம்’.
ஒய்.வி. ராவின் பிரியசகா பி.ஆர். பந்தலு. அவரது வற்புறுத்தலால், ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக நடித்தார் ருக்மணி.
1961 தொடங்கி 1975 வரையில் ஏராளமான அம்மா வேடங்கள். ஜெயலலிதா உட்பட அநேக நாயகிகளுக்குத் தமிழில் அமைந்த முதல் நட்சத்திர தாய் - மாமியார் குமாரி ருக்மணி. மாலையில் ஒய்.ஜி.பி. நாடகக் குழுவிலும் பங்கேற்று, அரும்பாடு பட்டு மகள் லட்சுமியைக் காப்பாற்றினார். லட்சுமி பெற்றோரைப் போலவே நடிப்பிலும் புகழிலும் உச்சம் பெற்றவர். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்காக நடுவண் அரசின் சிறந்த நடிகை பரிசு 1977-ல் ஒரே ஒரு முறை லட்சுமிக்குக் கிடைத்தது. அவ்வாறு தேசிய விருது வராமல் போனவற்றுக்குக் கணக்கேது?
லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. இயற்பெயர் சாந்த மீனா. ருக்மணி பாட்டியின் செல்லம். குழந்தையை அவளது முதல் பிறந்த நாள் அன்று மட்டுமே படம் பிடிக்க வேண்டும். அதற்கு முன்பு ஃபோட்டோ எடுக்கக் கூடாது என்று தடை விதித்ததவர் ருக்மணி. ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் ருக்மணியும் லட்சுமியும் சேர்ந்து நடித்த பக்திப் படம் ‘காரைக்கால் அம்மையார்’. சாந்த மீனாவைக் கவனித்துக்கொள்ள வேண்டி, காலையில் லட்சுமியும் மதியத்தில் ருக்மணியும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்கள்.
பின்னர் ஐஸ்வர்யாவும் 1990-ல் ‘நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ படம் மூலம் திரைக்கு அறிமுகமானார்.
நடித்த பிறபடங்கள்
டி. ஆர். மகாலிங்கத்துக்கு இணையாக பூலோக ரம்பை, ஸ்ரீ வள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
1946 இல் வெளியான லவங்கி திரைப்படம். இந்தப் படத்தில் நாயகனாக நடித்த இயக்குநர் ஒய். வி. ராவுடன் குமாரி ருக்மணிக்கு காதல் திருமணம் நடந்தது.
1947 இல் வெளியான பங்கஜவல்லி திரைப்படத்தில் கிருஷ்ணனாக ஆண் வேடத்தில் நடித்தார்.
ஸ்ரீராம் ஜோடியாக நடித்த முல்லைவனம் திரைப்படம், குமாரி ருக்மணி கதாநாயகியாக நடித்த கடைசிப் படம்.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக நடித்தார் ருக்மணி.
1961 தொடங்கி 1975 வரையில் பல திரைப்படங்களில் அன்னை வேடங்களில் நடித்தார்.
ஒரே குடும்பத்தில் பிறந்து ஸ்ரீ வள்ளி, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் போன்ற ஏ.வி.எம்-மின் வெற்றிச் சித்திரங்களில் பாட்டி, அம்மா, பேத்தி மூவரும், வெவ்வேறு தலைமுறைகளில் நடித்துள்ளது மிகவும் அபூர்வமான சுவாரஸ்யம்!
11
0
0
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
19 Apr 2020, 14:54
Открыть в Telegram
Поделиться
Пожаловаться
9
0
0
Показано
20
последних публикаций.
Показать больше
784
подписчиков
Статистика канала