க்களை அகற்றுவதற்கென்றே மாநகராட்சி அலுவலகங்களில் இயந்திரங்கள் உள்ளன. எனவே, அவற்றைப் பயன்படுத்தி முதலில் வாயுக்களை வெளியேற்ற வேண்டும்.
* அடுத்ததாக ஒரு குழாயைத் தொட்டிக்குள் செலுத்தி, கழிவுநீரை முழுவதுமாக அகற்ற வேண்டும். பின்னர் அதிலிருக்கும் திடக் கழிவுகளை அள்ளி திறந்தவெளியில் கொட்டிவிட வேண்டும். இதற்காக உள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
* கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியாளர்களில் சிலர் மது அருந்திவிட்டு அந்தப் பணியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* தொட்டிக்குள் நேரடியாக இறங்கி சுத்தம் செய்ய வேண்டியிருந்தால் பாதுகாப்பான முகக் கவசம் அணிந்துகொள்ளவேண்டும்.
* கழிவுநீர்த் தொட்டிக்கு அருகிலேயே முதலுதவிப் பெட்டியைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம்.
* மருத்துவமனை அருகில் இருந்தால் பிரச்னையில்லை. இல்லையென்றால் ஒரு மருத்துவர் அல்லது செவிலியரை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்'' என்றார்.
``வீட்டிலுள்ள ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின்சாதனப் பொருள்களிலிருந்து வெளியேறும் வாயுக்களாலும் உயிரிழப்பு ஏற்படுகிறதே?
``வீட்டிலுள்ள ஏ.சி., பிரிட்ஜ் போன்றவற்றிலிருந்து நச்சு வாயுக்கள் வெளியேறாது. அதற்கு வேறு சில காரணங்கள் உள்ளன. சில நேரங்களில் `ஷார்ட் சர்க்யூட்' (short circuit) ஏற்படும்போது, அதிக வெப்பத்தினால் ஏ.சி.யிலுள்ள `காயில்' எரிந்துவிடும் அல்லது வெடித்துவிடும். ஏ.சி யில் உள்ள குழாயில் `கூலன்ட்' (coolant) சரியில்லை என்றாலும், ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருந்தாலும் இவ்வாறு ஏற்படும். அந்த நேரத்தில் அதிகப்படியான புகை வெளியேறும். இந்த மாதிரி நிகழ்ந்தால், உடனடியாக வீட்டிலுள்ள அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்துவிட்டு, அங்கிருந்து வெளியேறிவிடவேண்டும். பெரும்பாலும் இரவில் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும்போதுதான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
ஏனென்றால், ஏ.சி வெடிப்பதால் அருகிலுள்ள பொருள்கள் தீப்பிடிக்கும். அதிலிருந்து வெளியேறும் புகை மூச்சடைப்பை ஏற்படுத்தும். இதனால், அங்கிருப்பவர்கள் மயக்கமடைந்துவிடுகின்றனர். எனவே, அவர்கள் அறையிலிருந்து வெளியேற வழியின்றி, மூச்சடைத்து இறக்க நேரிடுகிறது. ஏ.சி போன்ற சாதனங்கள் வெடிப்பதால் வெளியேறும் புகை மனிதர்களை மெதுவாகக் கொல்லும். ஆனால், கழிவுநீர்த் தொட்டியிலுள்ள வாயுவானது உடனடியாகக் கொல்லும். இதுதான் இவை இரண்டுக்குமான வேறுபாடு. பொதுவாகப் புகை என்றாலே பகைதான். இதுதவிர ஏ.சி., பிரிட்ஜ் போன்ற சாதனங்களில் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். அதேபோல, அந்தப் பொருள்களை முறையாகப் பராமரிப்பதும் அவசியம். இவ்வாறு செய்தால் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்” என்கிறார் ஜெயராமன்.
நன்றி விகடன்