உங்க பார்ட்னருடன் படுக்கையை பகிர்வதில் இந்த நன்மை இருக்கு.. ஆய்வு சொல்லும் ரகசியம்! - Dr.Antharangam
ஒருவர் தன் துணையுடன் உறங்கும்போது மன ஆரோக்கியம் மேம்படுவதாக ஸ்லீப் ரிசர்ச் சொசைட்டியின் ஆய்வு கூறுகிறது.
தூக்கம் பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஒரு செயல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கத்தை விரும்புவர். குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள் “எப்படா, ஞாயிற்றுக்கிழமை வரும் நல்லா தூங்கலாம்” என்ற மனப்பான்மை தான் இருக்கும். நாள் முழுவதும் வேலை, டென்ஷன் என ஓடிக்கொண்டே இருப்போம். ஆனால் தூங்கும்போது அவற்றை மறந்து தூங்குவோம்.
அந்தவகையில் சிலர் நன்றாக உறக்கம் வேண்டும் என்பதற்காக தங்களது படுக்கையை மற்றவர்களிடம் பகிர மாட்டார்கள். அண்ணன், தங்கை, தம்பி, அக்கா என யாரிடமும் பகிர மாட்டார்கள். சில குடும்பங்களில் இது செல்ல சண்டையாகவும் நடக்கும். மாறாக திருமணம் ஆனவர்கள், தங்கள் துணையுடன் ரொமான்டிக்காக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அந்தவகையில் தூக்கம் பற்றி சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
ஸ்லீப் ரிசர்ச் சொசைட்டியின் அதிகாரப்பூர்வ இதழான ‘ஸ்லீப்’ ஒரு ஆய்வு ஒன்றின் முடிவுவை வெளியிட்டது. ஒருவர் தன் பார்ட்னருடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதில் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில், தங்கள் காதல் துணையுடன் உறங்குவது நல்ல தூக்கத்தை கொடுப்பதோடு வேகமாகவும் நீண்ட நேரம் தூங்கவும் உதவுகிறது என கண்டறியப்பட்டது. இருப்பினும், இரு எல்லோருக்கும், எல்லா நிகழ்வுகளிலும் பொருத்தமாக இருக்காது.
துணையுடன் உறங்குபவர்கள் நன்கு உறங்குவதாகவும், தூக்கமின்மை, சோர்வு பிரச்சனைகள் அவர்களிடத்தில் குறைவாக இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகிறது. தனியாக தூங்குபவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், தூக்கமின்மையின் தீவிரம், சோர்வு அதிகம் காணப்படுவதாக தெரிய வருகிறது.
மேலும், துணையுடன் உறங்குவது மனச்சோர்வு, பதற்றம், மனம் அழுத்தம் குறைவாக உள்ளது. புரிதல், சமூக ஆதரவு, வாழ்க்கை மற்றும் உறவில் திருப்தி ஏற்படுகிறது என ஆய்வு கூறுகிறது. அதேவேளையில்,
போதுமான தூங்கமின்மை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். பிற நோய்களுக்கு வழிவகுக்கும். மன அழுத்தம், பதற்றம், கவனக் குறைவு ஏற்படும். நாள்பட்ட தூக்கமின்மை உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
🔞 @DocAntharangam