டெலிகிராமிற்கு ரூபாய் ஒரு கோடி ($1,47,000) அபராதம் விதிக்கப்பட்டது
ரஷ்யவில் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை அகற்ற மறுத்ததால், அபராதமாக மொத்தம் ரூபாய் ஒரு கோடி ($1,47,000) டெலிகிராமுக்கு விதிக்க புதிய வழக்குகள்
துவங்கப்பட்டன.
ரஷ்ய அரசின் (FSSP) தரவு வங்கியின் படி, டிசம்பர் 20, 2021 தேதியிட்ட மாஸ்கோவின் டாகன்ஸ்கி நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாயிலாக டெலிகிராம் நிறுவனத்திடமிருந்து $66,000, $27,000 மற்றும் $54,000 அபராதம் வசூலிக்க மூன்று அமலாக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
அறிக்கையின்படி, 2021 டிசம்பர் மத்தியில், முந்தைய அபராத நிலுவைத் தொகையான ரூபாய் 1.5 கோடியை ($2,00,000) டெலிகிராம் முழுமையாக செலுத்தியுள்ளது.
#abaraatham